/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ ஸ்டாண்டுகளை முறைப்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
/
ஆட்டோ ஸ்டாண்டுகளை முறைப்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆட்டோ ஸ்டாண்டுகளை முறைப்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆட்டோ ஸ்டாண்டுகளை முறைப்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 26, 2024 11:09 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், அதிகப்படியான ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், வரைமுறை இன்றி கட்டணம் வசூலிப்பது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த வீதிகளில் அதிவேகம் காட்டுவது, பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவது என, அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.
இது ஒருபுறமிக்க, நகரில் மக்கள் கூடும் பகுதிகளில், ஆட்டோ ஸ்டாண்ட் என்ற பெயரில் பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். அங்கு, அத்தியாவசிய தேவைக்கு வரும் மக்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த முற்பட்டால், அதற்கு இடையூறு ஏற்படுத்துடன், வாகனங்களை நிறுத்தக் கூடாது என, அதிகாரம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட், தேர்முட்டி, திருவள்ளுவர் திடல் உள்ளிட்ட பகுதிகளில், ஆட்டோ ஸ்டாண்ட் பெருமளவு நீண்டு காணப்படுவதால், அங்கு பிற வாகனங்களை நிறுத்த முடிவதில்லை.
ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களாக, ஒரு சாலை சந்திப்பை ஆக்கிரமித்து, ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துக் கொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மக்கள் கூறியதாவது
பொள்ளாச்சி நகரில் முறையான 'பார்க்கிங்' வசதி கிடையாது. பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், 'பார்க்கிங்' வசதி இன்றியே செயல்படுகின்றன. தவிர, வணிகக் கடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக, நகரின் எந்தவொரு சாலையிலும் வாகனங்கள் தாறுமாறாகவே நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் வரைமுறையின்றி ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைக்கப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்ட் அருகே, வாகனங்களை நிறுத்தி குடும்பத்தினரை பஸ் ஏற்றி விடவோ, அழைத்து செல்லவோ சென்றால், ஆட்டோ ஓட்டுனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அங்கு, போலீசார் இருந்தாலும், இந்த பிரச்னையில் தலையிடுவது கிடையாது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

