/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரம்பிக்குளம் அணையில் இருந்து 3 மதகுகளில் உபரிநீர் வெளியேற்றம்
/
பரம்பிக்குளம் அணையில் இருந்து 3 மதகுகளில் உபரிநீர் வெளியேற்றம்
பரம்பிக்குளம் அணையில் இருந்து 3 மதகுகளில் உபரிநீர் வெளியேற்றம்
பரம்பிக்குளம் அணையில் இருந்து 3 மதகுகளில் உபரிநீர் வெளியேற்றம்
ADDED : செப் 05, 2024 08:38 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியதால், மூன்று மதகுள் வழியாக உபரிநீர் நேற்று வெளியேற்றப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாப்சிலிப் அருகே, கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளம் --- ஆழியாறு பாசன திட்டத்தின் உயிர் நாடியாக விளங்கும், பரம்பிக்குளம் அணை, 72 அடி உயரமும், மொத்தம், 17 டி.எம்.சி., நீர் இருப்பும் கொண்டது.
அணைக்கு நீர் வரத்து அதிகரித்த சூழலில், கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட மதகுகள் வழியாக சோதனை ஓட்டமாக நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று அணை முழு கொள்ளளவை எட்டியது. மொத்தம் உள்ள, 72 அடியில், 71.78 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.
அணைக்கு நீர் வரத்தாக வினாடிக்கு, 4,600 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு, 3,600 கனஅடி நீரும், மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
உபரிநீர் பொரிங்கல் குத்து அணை, சாலக்குடி அருவி வழியாக அரபிக்கடலில் சென்று கலக்கிறது. மேலும், 1,000 கனஅடி நீர், டனல் வழியாக காண்டூர் கால்வாயில் செல்கிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால், பி.ஏ.பி., திட்ட கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், பரம்பிக்குளம் அணை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தியாகராஜன், சங்கீதா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.