/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வயநாடு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்
/
வயநாடு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்
ADDED : ஆக 06, 2024 09:58 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி சார்பில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழகத்திலிருந்து பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். பொள்ளாச்சி திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி சார்பில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் முதலுதவி மருந்துகள், வேட்டி, சேலை, போர்வை, உணவுப்பொருட்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்கள், கல்லுாரிச் செயலாளர் விஜயமோகன் தலைமையில் முதல்வர் வனிதாமணி முன்னிலையில் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.------