/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரவேற்பு அறையை திறக்க தயக்கம்; தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
/
வரவேற்பு அறையை திறக்க தயக்கம்; தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
வரவேற்பு அறையை திறக்க தயக்கம்; தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
வரவேற்பு அறையை திறக்க தயக்கம்; தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
ADDED : ஆக 29, 2024 10:13 PM

வால்பாறை : வால்பாறை தாலுகா அலுவலகத்தில் காட்சிப்பொருளாக உள்ள வரவேற்பு அறையை, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகா அலுவலகத்தில், பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், ஆதார் மற்றும் இ- -- சேவை மையத்தில் பல்வேறு சான்றிதழ் பெறவும், தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, முதியோர் ஓய்வூதியம் பெற வயதானவர்கள், அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், தாலுகா அலுவலகத்தின் முன்பாக, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட வரவேற்பு அறை, இன்று வரை திறக்கப்படவில்லை.
இதனால், தாலுகா அலுவலகத்துக்கு வரும் மக்கள், வெயிலிலும், மழையிலும் திறந்தவெளியில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப்பட்டு, பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் வரவேற்பு அறை திறக்கப்படாமல் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகருக்கு வெளியே தாலுகா அலுவலகம் உள்ளது. எஸ்டேட் பகுதியிலிருந்து சான்றிதழ்கள் வாங்க, தாலுகா அலுவலகம் வரும் மக்கள், உட்காரக்கூட இடவசதியின்றி அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், காட்சி பொருளாக உள்ள வரவேற்பு அறையை உடனடியாக திறக்க வேண்டும். சான்றிதழ்கள் பெற வரும் மக்களுக்கு விண்ணப்பங்களை எழுதி கொடுக்கும் வகையில், தனி ஊழியர் நியமிக்க வேண்டும்,' என்றனர்.
தாசில்தார் சிவக்குமாரிடம் கேட்ட போது, 'தற்போது தான் பணி மாறுதலில் வந்துள்ளேன். வரவேற்பு அறை திறக்கப்படாததது குறித்து தெரியவில்லை. ஆய்வு செய்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.