/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உளுந்து இலையில் பாதிப்புக்கு தீர்வு
/
உளுந்து இலையில் பாதிப்புக்கு தீர்வு
ADDED : ஏப் 18, 2024 04:09 AM

கிணத்துக்கடவு, : உளுந்து இலைகளில் பூச்சி தாக்கி துளைகள் ஏற்படுவதை தடுக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் பரவலாக உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், உளுந்து இலைகளில் ஏற்படும் சிறிய துளைகள், காய்ப்புழு தாக்குதலால் ஏற்படுகிறது. இந்த புழு மிகவும் சிறியதாக இருக்கும்.
இவைகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறியும் பட்சத்தில், 'ஏமா மேக்டின் பென்சோயேட்' என்ற பூச்சிக்கொல்லி மருந்தை, ஏக்கருக்கு,100கிராம் மற்றும் ஒரு கைப்பிடி அளவு சர்க்கரை ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் இலைகளில் உள்ள புழுக்கள் கட்டுப்படுத்தலாம். மகசூல் அதிகரிக்கும், என, வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்தார்.

