/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணியர் நிழற்கூரை முன்பாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
பயணியர் நிழற்கூரை முன்பாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பயணியர் நிழற்கூரை முன்பாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பயணியர் நிழற்கூரை முன்பாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மார் 04, 2025 06:10 AM

வால்பாறை; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பாக, விரிவாக்க பணிக்காக பயணியர் நிழற்கூரை அகற்றப்பட்டது. அதன்பின், மக்கள் கோரிக்கையை ஏற்று, அதன் அருகில், 9 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 'பைபர்' கண்ணாடி பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது.
கல்வெட்டு வைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, திறப்பு விழா நடத்தாமல் நிழற்கூரை பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், நிழற்க்கூரையை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் இருந்ததால், பயணியர் பயன்படுத்த முடியாத இருந்தது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதனால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதையும் கவனியுங்க!
வால்பாறை நகராட்சி அலுவலகம் முதல், காந்தி சிலை வரையிலும் சாலையோரம் மக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், சமீப காலமாக நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமின்றி நடைபாதை கடைகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.