/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் ஆகாயத்தாமரையை அகற்றுங்க! செடியோடு வந்து மனு கொடுத்த ஆர்வலர்
/
ஆற்றில் ஆகாயத்தாமரையை அகற்றுங்க! செடியோடு வந்து மனு கொடுத்த ஆர்வலர்
ஆற்றில் ஆகாயத்தாமரையை அகற்றுங்க! செடியோடு வந்து மனு கொடுத்த ஆர்வலர்
ஆற்றில் ஆகாயத்தாமரையை அகற்றுங்க! செடியோடு வந்து மனு கொடுத்த ஆர்வலர்
ADDED : ஏப் 30, 2024 01:40 AM

பொள்ளாச்சி;'ஆனைமலை ஆற்றில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்,' என, சமூக ஆர்வலர், உடலில் செடிகளை கட்டிக்கொண்டு நுாதன முறையில், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலை வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி, உடலில் ஆகாயத்தாமரை செடிகளை கட்டிக்கொண்டு நுாதன முறையில் மனு கொடுக்க, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் வந்தார். அதிகாரிகளிடம் மனுவை கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
மனுவில் கூறியிருப்பதாவது: ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஆழியாறு ஆற்றில் எப்போதும் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்துள்ளது.
ஆகாயத்தாமரை செடிகள், ஆற்றில் முற்றிலுமாக பரவி ஆக்கிரமித்துள்ளது. மழையும் ஏமாற்றி வரும் நிலையில், இருக்கும் நீரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆனைமலை பேரூராட்சி, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நீர் மாசடைந்துள்ளது.
இந்த ஆற்று நீரை நம்பியே, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக, பல லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். ஆனால், நீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை இல்லாதது வேதனை அளிக்கிறது. ஆகாயத்தாமரை செடி ஆற்று நீரை உறிஞ்சுவதுடன், தொற்று நேய்களை ஏற்படுத்தவும் முழு காரணமாக உள்ளது.
இதனால், தண்ணீரின் அளவு குறைந்துவிடும். எனவே, ஆகாயத்தாமரையை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

