/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடகை கார் உரிமையாளர்கள் போலீசில் புகார்
/
வாடகை கார் உரிமையாளர்கள் போலீசில் புகார்
ADDED : ஆக 29, 2024 10:27 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் இயங்கி வருகின்றன. எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கோவை பகுதிகளில் இருந்து ஆன்லைன் செயலி வாயிலாக வாடகைக்கு வரும் தனியார் நிறுவன வாகனங்கள், தங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட எல்லைப் பகுதியான பிரஸ்காலனிக்கு செல்லாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் வாடகை எடுத்து செல்கின்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.