/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு கவியருவியில் தடுப்பு கம்பி சீரமைப்பு
/
ஆழியாறு கவியருவியில் தடுப்பு கம்பி சீரமைப்பு
ADDED : ஆக 09, 2024 12:36 AM

ஆனைமலை:ஆனைமலை அருகே, ஆழியாறு பகுதி சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்குள்ள கவியருவியில், சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பருவமழை காரணமாக கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கவியருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, தடுப்பு கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டன. பாறை கற்கள் விழுந்து சில கம்பிகள் சேதமடைந்துள்ளன.
தற்போது, கம்பிகளை சீரமைக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மூங்கில் குச்சிகளை கொண்டு தடுப்பு கட்டப்படுகிறது. சுற்றுலா பயணியர் பாதுகாப்புக்காக தற்காலிகமாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.