/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் புதிய மண்டல அலுவலகம்
/
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் புதிய மண்டல அலுவலகம்
ADDED : செப் 01, 2024 01:25 AM

கோவை;ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக, கோவையில் புதிய மண்டல அலுவலகம் மற்றும் கோவைபுதுார் பகுதியில் புதிய கிளையை துவக்கி உள்ளது.
கோவைபுதுார் மகாத்மா காந்தி சாலையில் துவங்கப்பட்டுள்ள புதிய கிளையை, வங்கியின் இயக்குனரும், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவருமான தங்கராஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து, நஞ்சுண்டாபுரம் பகுதியில் செயல்படவுள்ள புதிய மண்டல அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''ரெப்கோ வீட்டு கடன் வசதி திட்டத்தில், பலர் பயனடைந்து வருகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரில், சேவையை விரிவுபடுத்தும் விதமாக புதிய மண்டல அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ரெப்கோ வங்கியின் இயக்குனர் இன்னாசி, தலைமை வளர்ச்சி அதிகாரி வைத்தியநாதன், கோவை மண்டல மேலாளர் சிபி, கோவை மற்றும் சேலம் மண்டல வளர்ச்சி மேலாளர் முரளிதரன், கோவைப்புதுார் கிளை மேலாளர் யோகேந்திரன்ஆகியோர் பங்கேற்றனர்.