ADDED : ஏப் 16, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, வடசித்துார் - குருநல்லிபாளையம் செல்லும் ரோட்டில், குடியிருப்புகள் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்பு பகுதி அருகே, ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இந்த ரோட்டில் நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.
விபத்து நடக்கும் அபாயமும் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி இந்த மின்கம்பதை, இடமாற்றம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

