/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைகளுக்கு சீக்கிரம் தீர்வு காண கோரிக்கை
/
குறைகளுக்கு சீக்கிரம் தீர்வு காண கோரிக்கை
ADDED : ஆக 03, 2024 09:49 PM
கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில், ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குறை தீர்ப்பு கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.
150க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். அவர்களிடமிருந்து, 47 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி, விரைந்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார். தங்கள் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண, கலெக்டரிடம் ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குத்சியாகவுசர், ஓய்வூதிய இயக்கக இணை இயக்குனர் கமல நாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கீதா, கணக்கு அலுவலர் அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.