/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தையல் தொழிலுக்கு மின் கட்டண சலுகை வழங்க கோரிக்கை
/
தையல் தொழிலுக்கு மின் கட்டண சலுகை வழங்க கோரிக்கை
ADDED : மார் 01, 2025 05:43 AM

சூலுார்; 'தையல் தொழிலுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்,'' என, தையல்கலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின், 21வது மாநில மாநாடு சூலுாரில் நடந்தது. மாநில தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார்.
தையல் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். தையல் கடைகளுக்கு, ரத்து செய்யப்பட்ட மின் கட்டண சலுகையை மீண்டும் வழங்கவேண்டும். தொழில் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
நல வாரிய உறுப்பினர்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு, குடிசை மாற்று வாரிய திட்ட வீடுகளை ஒதுக்க வேண்டும். நகராட்சி கடைகளில் தையல் கலைஞர்களுக்கு என கடை ஒதுக்க வேண்டும்.
கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
அத்திட்டத்தில் பெண்களின் வயது வரம்பை உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது.
மாநில துணைத்தலைவர் தங்கமணி, பிரகாசம், பொதுச்செயலாளர் தேவராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.