/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடை மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
/
நடை மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஆக 21, 2024 11:57 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் நடை மேம்பாலம் கட்டும் பணிகள் நிலுவையில் இருப்பதால், ரயில் பயணியர் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், இரண்டு நடைமேடைகள் உள்ளது. தற்போது ஒரு நடைமேடை மட்டும் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் கிணத்துக்கடவில் ரயில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரயில் பயணியர்களில் சிலர், இரண்டாவது நடைமேடை வழியாக வந்தாலும் ரயில் செல்லும் பாதையில் இறங்கி, செயல்பாட்டில் உள்ள நடை மேடைக்கு செல்லும் நிலை இருந்தது. மேலும், தரை பாலம் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷனில் நடை மேம்பாலம் அமைக்க கடந்த, 2019ம் ஆண்டு, 1.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. அதன்பின், கொரோனா காலத்தில் இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கொரோனா தளர்வுக்கு பின், 2021ம் ஆண்டு நடை மேம்பாலம் பணி முடிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்த பணி நிலுவையில் உள்ளது.
இதனால், ரயில் பயணியர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் நடை மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.