/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகற்றப்படாத பழைய மின்கம்பங்கள் குடோனுக்கு மாற்ற கோரிக்கை
/
அகற்றப்படாத பழைய மின்கம்பங்கள் குடோனுக்கு மாற்ற கோரிக்கை
அகற்றப்படாத பழைய மின்கம்பங்கள் குடோனுக்கு மாற்ற கோரிக்கை
அகற்றப்படாத பழைய மின்கம்பங்கள் குடோனுக்கு மாற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2024 12:10 AM

பொள்ளாச்சி;நகரில், பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டு, திறந்தவெளியில் விட்டு செல்லப்பட்ட பழைய மினகம்பங்களை, குடோனுக்கு எடுத்துச் செல்ல கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில், மின்கம்பங்களின் சிமென்ட் உதிர்ந்தும், பலவீனமடைந்து காணப்படுகிறது.
இதனால், மின்வாரிய ஊழியர்கள், இரும்புக்கம்பிகள் துருப்பிடித்து கீழே சாயும் நிலையிலான கம்பங்களைக் கண்டறிந்து, அவற்றை மாற்றி அமைக்க முனைப்பு காட்டுகின்றனர்.
அதன்படி, நகரின் பல பகுதிகளில், சேதமடைந்த பழைய மின் கம்பத்துக்கு மாற்றாக புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சில பகுதிகளில், பழைய மின்கம்பங்கள் ஆங்காங்கே விட்டுச் செல்லப்படுகின்றன.
விஷமிகள் சிலர், கம்பத்தை உடைத்து, அதனுள் உள்ள கம்பிகளை எடுத்துச் சென்று விற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சில இடங்களில் இரும்பு சட்டத்திலான மின்கம்பங்கள் வாகனம் மோதி வளைந்திருந்தால், அதனை மாற்றி அமைத்துள்ளனர்.
அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்கள் ஆங்காங்கே விட்டுச் செல்லாமல், மின்வாரிய குடோனுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'புதிய மின் கம்பங்கள் மாற்றியமைக்க அதிகப்படியான செலவினம் ஏற்படுகிறது. பழைய மின் கம்பங்களை ஒப்பிட்டே செலவினங்கள் கணக்கிடப்படுகிறது.
சேதமடைந்த மின் கம்பங்களை விற்பனை செய்யும் நோக்கில் சிலர் உடைத்து எடுத்து செல்கின்றனர். அசைக்க முடியாத இரும்பு மின் கம்பங்களால் விபத்து அபாயமும் உள்ளது.
ஆனால், வீணாகக் கிடக்கும் பழைய மின் கம்பங்களை, குடோனுக்கு எடுத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.