/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை
/
அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை
ADDED : ஏப் 29, 2024 11:16 PM
சூலுார்:அரசூர் மேல்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.
சூலுார் அடுத்த அரசூரில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆயிரத்து, 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
மொத்தம், 50 ஆசிரிய, ஆசிரியைகள் பணியிடங்களில், 31 பேர் மட்டுமே உள்ளனர். 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கூறுகையில், ஒரு வகுப்புக்கு, 40 மாணவர்கள் இருக்க வேண்டிய நிலையில், 60 முதல், 65 மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. போதுமான வகுப்பறைகளும் இல்லாத நிலை உள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்பவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், என்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி கூறுகையில், வணிகம் மற்றும் பொருளாதாரப் பிரிவுக்கு ஆசியர்கள் தேவை உள்ளது.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் அப்பிரிவுகளுக்கு தற்காலிகமாக இரு ஆசிரியர்களை நியமித்து சம்பளம் வழங்கி வருகிறோம்.
அரசு நிரந்தர ஆசிரியர்களை நியமித்தால் அப்படிப்புகளில் கூடுதலாக மாணவர்களை சேர்த்து புதிய பிரிவை துவக்க முடியும், என்றார்.

