/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியில் ஹோமியோபதி மருத்துவமனை துவங்க கோரிக்கை
/
மாநகராட்சியில் ஹோமியோபதி மருத்துவமனை துவங்க கோரிக்கை
மாநகராட்சியில் ஹோமியோபதி மருத்துவமனை துவங்க கோரிக்கை
மாநகராட்சியில் ஹோமியோபதி மருத்துவமனை துவங்க கோரிக்கை
ADDED : மார் 03, 2025 04:15 AM

கோவை,: ஹோமியோபதி டாக்டர்கள் சங்கம் சார்பில், மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நேற்று, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அரங்கில் நடந்தது. கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 டாக்டர்கள் பங்கேற்றனர்.
இதில், ஹோமியோபதி மருந்து தயாரிப்பு முறைகள், சிகிச்சை முறைகள், நோய் தடுப்பு, திடீர் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுக்கு உள்ள தீர்வுகள் என, பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் பேசினர். மருத்துவ முகாம் இலவசமாக நடத்தப்பட்டது.
சங்க பொருளாளர் டாக்டர் அருணபிரியா கூறுகையில், ''ஹோமியோபதி சிகிச்சை முறையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். தசை சிதைவு நோய் பாதிப்புள்ளவர்களுக்கு, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, அதிக ஆண்டுகள் வாழவைக்க இயலும். 'ஆட்டோ இம்யூன்' சார்ந்த நோய்கள், மரபணு நோய்கள் அனைத்துக்கும் தீர்வு காண இயலும்,'' என்றார்.
சங்க ஆலோசகர் டாக்டர் தாமரை செல்வன் கூறுகையில், ''சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஹோமியோபதி பிரிவு செயல்படுகிறது. கோவையிலும் செயல்படுத்த, மேயர் ரங்கநாயகியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அரசு மருத்துவமனையிலும் ஹோமியோபதிக்கு, தனிப்பிரிவு துவங்க வேண்டும்,'' என்றார்.
துவக்கவிழா நிகழ்வில், கோவை மேயர் ரங்கநாயகி, ராயல்கேர் மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன், சங்க தலைவர் தினேஷ் சாமுவேல், செயலாளர் பார்த்திபன், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி முதல்வர் ஹாரத்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.