/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேடல் டேம் பாலத்தை உயர்த்தி கட்ட கோரிக்கை
/
சேடல் டேம் பாலத்தை உயர்த்தி கட்ட கோரிக்கை
ADDED : மார் 04, 2025 06:09 AM
வால்பாறை; வால்பாறை, சேடல்டேம் பாலத்தை உயர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அருகே, தமிழக - கேரள எல்லையில் சோலையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளாக மேல்நீராறு, கீழ்நீராறு ஆகிய இரு அணைகள் உள்ளன.
இந்நிலையில், ஆண்டு தோறும் பெய்யும் பருவமழையின் போது, அணை நிரம்பியதும் சேடல் டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டி, இருநுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
சேடல்டேம் பொதுமக்கள் கூறியதாவது:
சோலையாறு அணைப்பகுதியில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம். இது வரை மக்களுக்கு பட்டா வழங்கவில்லை.
இந்நிலையில், சேடல்டேம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் உள்ள பாலம் தாழ்வாக உள்ளது.
இதனால், கனமழை பெய்யும் போது, பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் சூழ்நிலை உள்ளது. எனவே, சேடல் டேம் பகுதியில் உள்ள பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும்.
அப்போது தான், தண்ணீர் எவ்வளவு வெளியேறினாலும் இங்கு வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.