தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஜூன் 26, 2024 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2024 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை : உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உடுமலை நகரில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, முக்கிய வணிக கடைகள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.

இதனால், இந்த ரோடு எப்பொழுதும் போக்குவரத்து அதிகம் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், இந்த ரோட்டில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுவதும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் வாகன ஓட்டுநர்களுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது.

குறிப்பாக, திங்கட்கிழமைகளில் சந்தை கூடுகிறது. அன்று ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, இந்த ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us