/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர பிளக்ஸ்களை அப்புறப்படுத்த கோரிக்கை
/
ரோட்டோர பிளக்ஸ்களை அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 26, 2025 11:32 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் இருந்து, பகவதிபாளையம் செல்லும் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ்களை அகற்ற வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் இருந்து, பகவதிபாளையம் செல்லும் ரோட்டில் தனியார் கல்லூரி ஆர்ச் அருகே, ரோட்டின் ஓரத்தில் ஒரு பகுதியில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், சர்வீஸ் ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டுநர்கள், பகவதிபாளையம் ரோட்டில் திரும்பும் போது இங்குள்ள பிளக்ஸ்களால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் தடுமாறுகின்றனர். மேலும், இந்த சர்வீஸ் ரோட்டை இரு வழித்தடமாக பயன்படுத்துவதால், இரவு நேரத்தில் செல்லும் போது, வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இப்பகுதியில் இருக்கும் பிளக்ஸ்களை விரைவில் அகற்றம் செய்ய வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.