ADDED : ஜூலை 03, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: வடபுதூரில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க காலதாமதமாவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, வடபுதூரில் உள்ள தம்பிராஜ் நகரில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள, மின்கம்பம் கடந்த ஒரு ஆண்டாக சேதமடைந்த நிலையில், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில், கம்பத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தியதை தொடர்ந்து, புதிய மின் கம்பம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சேதமடைந்த கம்பத்தை மாற்றி அமைக்காமல், மின் பணியாளர்கள் ரோட்டோரத்தில் கிடப்பில் போட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
