/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2024 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் வருகின்றனர்.
இந்த வழியாக செல்லும் ரயில்களிலிருந்தும் ஏராள மான பயணியர் வந்து இறங்குகின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.