தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தவறான தகவல் அளித்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தவறான தகவல் அளித்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தவறான தகவல் அளித்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : ஜூலை 27, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஒண்டிப்புதுார் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் 4 ஏக்கர் நிலம், 1980ல் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தால், 66 உறுப்பினர்களுக்கு மனைகளாக வழங்கப்பட்டன. வீடுகள் கட்டி 45 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கின்றனர்.

குடியிருப்போர் கோரிக்கையின்படி, 2001ல் மனைப்பட்டா வழங்கப்பட்டது. 2020ல் தடையில்லா சான்று மற்றும் 94 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

ஜூலை 13ல் குடியிருப்புடன் தொடர்பில்லாத சிலர், 60 பேருக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை என, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது பொய்யான குற்றச்சாட்டு என்கின்றனர், அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்போர் நல சங்கத்தினர். 

சங்கத்தினர் கூறுகையில், ‘தவறான தகவல்களை அளித்து, அரசு அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, ஆள்மாறாட்டம் செய்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us