ADDED : ஜூன் 19, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
பீளமேடு: சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் ‘டாஸ்மாக்’ நிர்வாகத்துக்கு எதிராக ‘யூ டியூப்’ சேனல் ஒன்றில் கருத்து தெரிவித்ததாக கூறி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி பீளமேட்டில் உள்ள ‘டாஸ்மாக்’ முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் திரண்டனர். மண்டல மேலாளர் கோவிந்தராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி ராக்கிமுத்து கூறுகையில்,‘‘சி.ஐ.டி.யு., நிர்வாகி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக பேசவில்லை. விளக்கம் கேட்காமல் அவரை ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளனர். சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.
