/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
12 அடி நீள மலைப்பாம்பு தோலம்பாளையத்தில் மீட்பு
/
12 அடி நீள மலைப்பாம்பு தோலம்பாளையத்தில் மீட்பு
ADDED : செப் 07, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம், காரமடை தோலம்பாளையம் அருகே பரத் தோட்டம் என்ற இடத்தில், நேற்று முன்தினம் மதியம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித்திற்கு தகவல் அளித்தனர்.
வனச்சரகர் அறிவுரைப்படி, வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின், பாம்புக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாம்பு நல்ல நிலையில் உள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மலைப்பாம்பை அத்திக்கடவு வேப்பமரத்தூர் செல்லும் அடர்ந்த வனப்பகுதிக்குள் நல்ல முறையில் வனத்துறையினர் விடுவித்தனர்.
---