/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் நடந்த ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கம்
/
வேளாண் பல்கலையில் நடந்த ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கம்
வேளாண் பல்கலையில் நடந்த ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கம்
வேளாண் பல்கலையில் நடந்த ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கம்
ADDED : ஆக 14, 2024 12:48 AM
கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலை முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் சார்பில், 'ஒன்பதாவது வேளாண் ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கு, 'வேளாண் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல்' என்ற தலைப்பில் நடந்தது.
இதில், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இயற்கை வள மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் ஆலோசகர் பாஸ்கர், வேளாண்மையில் காலநிலை மாற்றங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு, பாலைவனமயமாக்கல், கரியமில வாயுவை குறைத்தல், கரிம வர்த்தகம், சுழற்சி பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தார்.
மேலும், துறை சார்ந்த வல்லுநர்கள் வேளாண்மையில் தொழில்நுட்பங்கள் வணிகமயமாக்கலின் அவசியம், இயந்திரமயமாக்கல் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படும் பயன் உள்ளிட்டவை குறித்து, மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
பல்வேறு பல்கலை, கல்லுாரிகளை சேர்ந்த, 1254 ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், துணைவேந்தர் கீதாலட்சுமி, முதுகலை பிரிவு டீன் சுரேஷ்குமார், தாவர மூலக்கூறுஉயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.