/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ தகுதியற்றதாக மாறிப்போயின வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் கலெக்டரிடம் குடியிருப்பு வாசிகள் புகார்

ADDED : மார் 05, 2025 03:24 AM
கோவை:பெ.நா.பாளையம் குப்பிச்சிபாளையத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அடுக்குமாடிகளாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வாழ தகுதியற்றதாக மாறிவிட்டன; மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று, அங்கு வசிக்கும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெ.நா.பாளையம் குப்பிச்சிபாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 1,440 வீடுகளை கட்டி பயனாளிகளுக்கு வழங்கியது. பயனாளிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குடியேறினர்.
ஆனால் மக்கள் வாழ்வதற்கான குடிநீர் வசதியோ, கழிவுநீர் வெளியேறுவதற்கான வசதியோ, குப்பிச்சிபாளையத்திலிருந்து குடியிருக்கும் பகுதி வரைக்கும், சாலை போக்குவரத்து வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை.
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் குடியிருப்பு வளாகத்திற்குள்ளே, செயல்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்பினுள் வசிக்க முடியாமலும், சுவாசிக்க முடியாமலும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தெருவிளக்குகள் முறையாக அமைக்கப்படவில்லை, பராமரிப்புத்தொகை செலுத்தியும் எவ்வித பராமரிப்புப்பணிகளும் மேற்கொள்ளப் படவில்லை. இங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, கலெக்டரிடம் மக்கள் புகார் அளித்தனர்.