/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
33 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு; முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
/
33 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு; முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
33 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு; முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
33 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு; முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
ADDED : பிப் 15, 2025 06:52 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர்கள், 33 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சந்தித்து, தங்களது நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
பொதுவாக, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்களது நண்பர்களையும், உடன் படித்தவர்களை சந்திக்கும் வகையில், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில், தாங்கள் படித்த போது நிகழ்ந்த சம்பவங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் வாயிலாக, அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. இதை ஒரு அரிய வாய்ப்பாக எண்ணுகின்றனர்.
அவ்வகையில்,பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரி, 1989 - 92ம் ஆண்டு, பி.ஏ., பொருளாதார பிரிவு முன்னாள் மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து நட்பை தொடர்ந்து வருகின்றனர்.
அவ்வகையில், சந்திப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டனர். இதையடுத்து, மீன்கரை ரோடு, தனியார் ரிசார்ட்டில், 33 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர்கள், 32 பேர் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு, நினைவுகளை உற்சாகமாக பகிர்ந்து கொண்டனர். சக நண்பர்கள், தோழிகளுடன் 'செல்பி'யும்எடுத்துக் கொண்டனர்.
தங்களது கல்லுாரி அனுபவ நாட்களை நினைவூட்டி, முன்னாள் மாணவர்களை கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்புக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் மாணவர்கள் கிரி, மோகனசுந்தரம், புவனேஸ்வரி, கவிதா, புஷ்பராணி மற்றும் கண்ணம்மாள் ஆகியோருக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தாங்கள் என்றும் மறக்கமாட்டோம் என, முன்னாள் மணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.