/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 மணி நேர வேலை அமல்படுத்த தீர்மானம்
/
8 மணி நேர வேலை அமல்படுத்த தீர்மானம்
ADDED : மே 24, 2024 01:17 AM
கோவை;108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா ஆகியவை இணைந்து கோவை தாமஸ் கிளப்பில் மே தின அரங்கக்கூட்டம் நடத்தியது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா மாநில துணை தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.
மத்திய, மாநில அரசுகள் அனைத்து துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போக்கை நிறுத்த வேண்டும்.
தமிழக பொது சுகாதாரத்துறையில், 108 ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து துறைகளிலும் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் போராடி பெற்ற, 8 மணி நேர வேலையை அனைத்து துறைகளிலும் அமல்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.