/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு புதிய உறுப்பினர்கள் தேர்வு
/
பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு புதிய உறுப்பினர்கள் தேர்வு
பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு புதிய உறுப்பினர்கள் தேர்வு
பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு புதிய உறுப்பினர்கள் தேர்வு
ADDED : செப் 03, 2024 02:07 AM

பொள்ளாச்சி, டி.நல்லிகவுண்டன்பாளைம் ஊராட்சி பள்ளி மற்றும் தொப்பம்பட்டி அரசு பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அருகே டி.நல்லிகவுண்டன்பாளைம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்ட அழைப்பாளராக பள்ளித் தலைமையாசிரியர் சந்திரா, மறு கட்டமைப்பு பார்வையாளராக பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மேலாண்மை குழு தலைவராக மாரிமுத்து, துணை தலைவராக பவித்ரா மற்றும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
* தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மேலாண்மைகுழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் தேவி, வரவேற்றார். புளியம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சித்ரா பார்வையாளராக செயல்பட்டார்.
தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பதன் நோக்கம், முக்கியத்துவம், உறுப்பினர்களின் பொறுப்புகள், மாணவர்களின் கல்வி மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து பெற்றோர்களிடம் விளக்கப்பட்டது.
தொடர்ந்து, மேலாண்மைக்குழு தலைவராக அய்யம்மாள், துணைத்தலைவராக இந்திரா, உள்ளாட்சி பிரதிநிதிகளாக ராதா, ஜெயா, கல்வியாளராக பிரீத்தா மற்றும் உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
வால்பாறை
வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எல்.டி., ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக்கூட்டம் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் வேல்மயில் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம், நகராட்சி கவுன்சிலர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மைக்குழு கட்டமைப்பின் தலைவராக ராஜேஸ்வரி, தேர்வு செய்யப்பட்டனர் மற்றும் உறுப்பினர்களாக, 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
* முருகாளி எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக்கூட்டம், தலைமை ஆசிரியர் உதயன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி மன்ற கவுன்சிலர் கலாராணி, தேர்தல் பார்வையாளராக ஆசிரியர் பயிற்றுநர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை வித்யா வரவேற்றார்.
கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக்குழு கட்டமைப்பின் தலைவராக சித்ரா, துணைத்தலைவராக மணிமேகலை ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில், பள்ளி வளாகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்.
வகுப்பறை மேற்கூரை சேதமான நிலையில், மழை நீர் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளதால், இங்கு, நகராட்சி சார்பில் மேற்கூரை அமைத்துதர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* சோலையாறு எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம், நகராட்சி கவுன்சிலர் கீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சண்முகப்பிரியா வரவேற்றார்.
தேர்தல் பார்வையாளர் சிவன்ராஜ் முன்னிலையில் நடந்த தேர்தலில், பள்ளி மேலாண்மைக்குழு கட்டமைப்பின் தலைவராக மணிமேகலை, துணைத்தலைவராக சுகன்யா மற்றும் உறுப்பினர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில், 2024 முதல் 2026ம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடந்தது. இதில், மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நடந்த பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் வரவேற்றார்.
எஸ்.எம்.சி., மறு கட்டமைப்பு பற்றிய முதல்வர் உரை, கல்வி அமைச்சர் உரை, வரவேற்பு பாடல் போன்றவைகள் காணொலி காட்சி வாயிலாக காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட, 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கூட்டுப்பதிவேட்டில் கையொப்பம் இட்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு வட்டாரத்தில், 9 நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.