/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் கண்விழித்திரை பதிவு
/
ரேஷன் கடைகளில் கண்விழித்திரை பதிவு
ADDED : ஆக 07, 2024 10:52 PM

வால்பாறை : வால்பாறையில் உள்ள ரேஷன் கடைகளில் கண்விழித்திரை பதிவு செய்து, பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.
வால்பாறை தாலுகாவில், மொத்தம், 47 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 16,534 கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகள் வாயிலாக, மாதம் தோறும் அத்தியாவசியப்பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு நடைமுறைக்கு வந்த பின், பொருட்கள் வாங்க கை ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்கின்றனர்.
தற்போது கண்விழித்திரை பதிவு வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. சிவில் சப்ளை அதிகாரிகள் கூறுகையில், 'கை ரேகை பதிவு செய்யும் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ரேகை பதிவு செய்ய இயலாதவர்கள் கருவிழித்திரை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சில எஸ்டேட் பகுதியில் நெட் ஒர்க் பிரச்னையால், கை ரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றன,' என்றனர்.