ADDED : மே 29, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: கோவை பிரசிடென்சி அலையன்ஸ் சங்கம், பன்னீர்மடை விழுதுகள் பொதுநல அமைப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில், துடியலுார் அருகே பன்னீர்மடை தர்மராஜா கோவில் மைதானத்தில், நாளை காலை 8:00 மணி முதல் மதியம் 2 மணி வரை, சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு கண் விழித்திரை பரிசோதனை இலவச முகாம் நடக்கிறது.
பங்கேற்போருக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கண் விழித்திரை சிறப்பு மருத்துவரால் பரிசோதிக்கப்படும். விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கண் விழித்திரை பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு, கண் நரம்பு அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
