/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பொறியியல் கல்லுாரிகளில் தொழில்நுட்ப அலுவலர் சங்கம் உதயம்
/
அரசு பொறியியல் கல்லுாரிகளில் தொழில்நுட்ப அலுவலர் சங்கம் உதயம்
அரசு பொறியியல் கல்லுாரிகளில் தொழில்நுட்ப அலுவலர் சங்கம் உதயம்
அரசு பொறியியல் கல்லுாரிகளில் தொழில்நுட்ப அலுவலர் சங்கம் உதயம்
ADDED : மே 16, 2024 04:31 AM
கோவை, : தமிழகத்தில் உள்ள, 11 அரசு பொறியியல் கல்லுாரிகளை மையமாக கொண்டு, பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
புதிதாக துவங்கியுள்ள இச்சங்கம் கோவையை மையமாக கொண்டு செயல்படவுள்ளது. இதில் மாநில தலைவராக கோவை ஜி.சி.டி., கல்லுாரி கார்த்திகேயன், மாநில பொதுச் செயலாளராக சேலம் அரசு பொறியியல் கல்லுாரி விசு, மாநில துணைத் தலைவர்களாக ரஞ்சித்குமார், கண்ணன், வெங்கட்ராமன் மாநில இணைச் செயலாளர்களாக மாரித்துரை, சுபாஸ் சந்திர போஸ், செந்தில்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள், தொழில்நுட்ப பதவிகளுக்கான பதவி மறுசீரமைப்பை விரைந்து நடைமுறைப்படுத்த வலியுறுத்தினர்.