/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் வடிகால் பகுதியில் பள்ளத்தால் விபத்து அபாயம்
/
மழைநீர் வடிகால் பகுதியில் பள்ளத்தால் விபத்து அபாயம்
மழைநீர் வடிகால் பகுதியில் பள்ளத்தால் விபத்து அபாயம்
மழைநீர் வடிகால் பகுதியில் பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : மே 05, 2024 11:15 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் ரோட்டில் உள்ள மழைநீர் வடிகால் பகுதியில் உள்ள பெரிய குழியால் விபத்துகள் ஏற்படுகின்றன.
பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்தாலும், அதில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த ரோட்டில் உள்ள மழைநீர் வடிகால் அருகே, பெரிய குழியால் விபத்துகள் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் ரோடு ஏற்கனவே குறுகலாக உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, அதன்மீது நடைபாதை அமைத்து சென்டர் மீடியன் கம்பிகள் அமைக்கப்பட்டது.
மழைநீர் வடிகால் மீது அமைக்கப்பட்டுள்ள, சில சிலாப் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. மேலும், அதன் அருகே பெரிய குழியுள்ளதால், விபத்து ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும் குழியை மூட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மக்கள் கூறினர்.