/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுண்டானா அருகே இடையூறு :பிளக்ஸ்களால் விபத்து அபாயம்
/
ரவுண்டானா அருகே இடையூறு :பிளக்ஸ்களால் விபத்து அபாயம்
ரவுண்டானா அருகே இடையூறு :பிளக்ஸ்களால் விபத்து அபாயம்
ரவுண்டானா அருகே இடையூறு :பிளக்ஸ்களால் விபத்து அபாயம்
ADDED : மே 28, 2024 11:25 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில், அதிகப்படியான மக்கள் காலை மற்றும் மாலை நேரத்தில், 'வாக்கிங்' செல்லவும், விளையாட்டு பயிற்சியில் ஈடுபடவும் வருகின்றனர்.
இந்நிலையில், ரவுண்டானா பகுதியை சுற்றிலும் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டன. இந்த கடைகளால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
அதேபோன்று, கோவை ரோட்டில் இருந்து ரவுண்டானா வரும் ரோட்டிலும், ரவுண்டானாவில் இருந்து பல்லடம் ரோடு செல்லும் ரோட்டிலும், மாலை நேரத்தில் புற்றீசல் போன்று, துரித உணவு கடைகள் முளைத்துள்ளன. இந்த இடையூறுகள் ஒரு புறம் இருக்க, ஆங்காங்கே பிளக்ஸ் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். விதிமுறை மீறி ரோட்டை ஆக்கிரமிப்பு செய்தும், கடைகள் மற்றும் மண்டபம் முன்பாக விளம்பர பிளக்ஸ் வைக்கின்றனர்.
இதனால், பாதசாரிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த பிளக்ஸ் காற்றுக்கு கீழே விழும் வாய்ப்புள்ளது. எனவே, பிளக்ஸ்களை அகற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.