/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அபாயம்
/
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : மே 08, 2024 12:29 AM

போத்தனுார்;திருமலையாம்பாளையம் பிரிவு - எட்டிமடை பிரிவு வரை, சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கோவை -- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், திருமலையாம்பாளையம் பிரிவிற்கு முன் ஆர்.டி.ஓ., சோதனை சாவடி உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான காஸ் டேங்கர் லாரிகள் கேரளாவுக்கு சென்று, வரும்.
வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் டேங்கர் லாரி டிரைவர்கள் ஓய்வுக்காக சாலையின் ஓரத்தில் நிறுத்துவர். அதுபோல் இருபுற சர்வீஸ் சாலைகளிலும். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் செக்போஸ்ட் துவங்கி எட்டிமடை பிரிவு வரை லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இங்குள்ள தனியார் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காஸ் டாங்கர் மீது சுவர் இடிந்து, விழுந்து காஸ் கசிவு ஏற்பட்டது. மீண்டும் இத்தகைய சம்பவங்களோ, விபத்தோ ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

