/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 500 மீட்டருக்கு ரோடு
/
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 500 மீட்டருக்கு ரோடு
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 500 மீட்டருக்கு ரோடு
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 500 மீட்டருக்கு ரோடு
ADDED : மே 03, 2024 01:11 AM

சூலுார்:அரசூரில் மந்தை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தார் ரோடு போடப்பட்டுள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ள கால்நடை பராமரிப்பு துறை, நிலத்தை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சூலுார் ஒன்றியம் அரசூர் ஊராட்சியில், சரவணம்பட்டி செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் உள்ள கானவேட பெருமாள் கோவில் அருகில், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான மந்தை புறம்போக்கு நிலம், 3 எக்டர், 50 சென்ட் உள்ளது.
இந்த இடத்தை ஆக்கிரமித்த தனி நபர்கள் சிலர், அதில் இருந்து நூற்றுக்கணக்கான லோடு மண் எடுத்து கடத்தி உள்ளனர். மேலும், அந்த இடத்தின் நடுவில் இரவோடு இரவாக 500 மீட்டருக்கு தார் ரோடு போட்டுள்ளனர். இவை, அனைத்தும், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இரு நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்த கால்நடை பராமரிப்பு மற்றும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அரசூர் கிராமம், க.ச., எண் 481/1, 481/3/, 481/7, 481/ 9 ஆகியவை கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான இடம், இது பொது வழி அல்ல என, அதில் கூறப்பட்டுள்ளது.