/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை சீரமைப்பு கவுன்சிலர் உறுதி
/
சாலை சீரமைப்பு கவுன்சிலர் உறுதி
ADDED : ஆக 08, 2024 10:59 PM
போத்தனூர்;கோவை மாநகராட்சி, 98 வது வார்டு, போத்தனூர் அருகேயுள்ள இ.பி., காலனியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த காலனிக்கான பிரதான சாலை பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது; மீண்டும் சீரமைக்கப்படவில்லை.
மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக சாலை மாறியதால்அப்பகுதி மக்கள், வார்டு கவுன்சிலர் உதயகுமாரிடம் முறையிட்டனர். இதுகுறித்த செய்தி நமது நாளிதழில் நேற்று முன் தினம் வெளியானது. இதையடுத்து, விடுபட்ட வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி துவங்கியுள்ளது.
வார்டு கவுன்சிலர் உதயகுமார் கூறுகையில், இ.பி., காலனி சாலையை சீரமைக்க கோரினர். மழைக்கு முன் சாலையில் மண் கொட்டி நிரப்பப்பட்டது. மழையால் மீண்டும் சேதமானது.
சிலர், வேண்டுமென்றே எனக்கு அவப்பெயரை ஏற்படுத்த 'அரசியல்' செய்கின்றனர். சிறந்த துாய்மை பணிக்கான பாராட்டினை, மாநகராட்சி நிர்வாகத்திடம் எனது வார்டு பெற்றது. இதே போன்று பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எதிலும், 'கமிஷன்' வாங்காத கவுன்சிலர் நான்; மக்களுக்காக உழைக்கிறேன். சிலர் இடையூறு செய்கின்றனர்,'' என்றார்.