sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோடு மேலே ரோடு; பள்ளத்துக்குள் போகிறது வீடு! சாய்பாபா காலனியில் 'பேருக்கு பணியால்' பெரும்பாடு

/

ரோடு மேலே ரோடு; பள்ளத்துக்குள் போகிறது வீடு! சாய்பாபா காலனியில் 'பேருக்கு பணியால்' பெரும்பாடு

ரோடு மேலே ரோடு; பள்ளத்துக்குள் போகிறது வீடு! சாய்பாபா காலனியில் 'பேருக்கு பணியால்' பெரும்பாடு

ரோடு மேலே ரோடு; பள்ளத்துக்குள் போகிறது வீடு! சாய்பாபா காலனியில் 'பேருக்கு பணியால்' பெரும்பாடு


ADDED : ஜூன் 25, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணாகும் தண்ணீர்


பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் அன்னபூர்ணா ஓட்டல் எதிரே, குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் பெருமளவு தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- அருள்ராஜ், குனியமுத்துார்.

நிழற்குடையின்றி தவிப்பு


பேரூர் மெயின் ரோடு, செல்வபுரம் பகுதியில், மின் அலுவலகம் மற்றும் ஆர்.எம்.சி.எச்., மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்த, ஆணை வெளியிட்டு பத்து வருடங்கள் ஆகியும், நிழற்குடை கட்டப்படவில்லை. பயணிகள் வெயில், மழையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

- ஜெயபால், செல்வபுரம்.

தொற்றுநோய் அபாயம்


கவுண்டர் மில்ஸ், சுப்பிரமணியம்பாளையம், 15வது வார்டு, முத்தம்மாள் லே-அவுட்டில், சாக்கடை கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யவில்லை. குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதால், நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

- சரஸ்வதி, கவுண்டர் மில்ஸ்.

பாலத்தின் கீழ் குப்பை


வடகோவை மேம்பாலத்திற்கு கீழே, இருசக்கர வாகனங்கள் டவுன்ஹாலை நோக்கி செல்லும் இடத்தில், பெருமளவு உணவு கழிவு மற்றும் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வண்டிகளில் வந்து சிலர் கொட்டிச்செல்கின்றனர். குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் இங்கு குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.

- செந்தில்குமார், வடகோவை.

கடும் துர்நாற்றம்


டவுன்ஹால், வைசியாள் வீதியில், அரசு மருத்துவமனையின் அருகே, எச்.பி., காஸ் ஏஜென்சி எதிரேவுள்ள சந்தில், பல மாதங்களாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- அய்யப்பன், டவுன்ஹால்.

ஆக்கிரமிப்பால் குறுகிப்போன சாலை


செட்டிபாளையம் பேரூராட்சி, எட்டாவது வார்டு, கோவில் வீதியில் சிலர் வீடுகளின் திண்ணை, படிக்கட்டு, கழிவறை ஆகியவற்றை சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். மிகவும் குறுகலாக உள்ள சாலையில், கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை.

- அகல்யா, செட்டிபாளையம்.

தரமற்ற சாலைப்பணி


சாய்பாபாகாலனி, என்.எஸ்.ஆர்.ரோட்டில் சாலை பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பழைய சாலையை முழுமையாக தோண்டவில்லை. அதன் மீதே, புதிய ரோடு அமைத்தால், வீடுகள் மிகவும் தாழ்வாகிவிடும். இதனால், மழைநீர் வீட்டுக்குள் வர வாய்ப்புள்ளது.

- ராஜ்குமார்,சாய்பாபா காலனி.

திறந்தநிலை சாக்கடை


உக்கடம் பேருந்து நிலையம் அருகே, பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, சிலாப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் கழிவுகளையும் அகற்றவில்லை; சாக்கடை கால்வாயையும் மூடவில்லை. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குழந்தைகள் குழியில் விழுவதற்கு வாய்ப்புள்ளது.

- ஆஷிக் அகமது, உக்கடம்.

குவியும் குப்பை


சிங்காநல்லுார் பேருந்து நிலையம் எதிரே, ஆர்.வி.எல்., காலனி மேற்கு பகுதியில், ரிசர்வ் சைட்டில் சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. குப்பையால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போர் அவதிக்குள்ளாகின்றனர்.

- செந்தில்குமார், ஆர்.வி.எல்., காலனி.

காட்சிப்பொருளாய் தெருவிளக்குகள்


பீளமேடு புதுார், திருமகள் நகரில், முதலாவது மெயின் சாலையில உள்ள இந்த மின்கம்பத்தில், தெருவிளக்குகளுக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள், பாதசாரிகள் பாதிப்படைகின்றனர்.

- வேலுசாமி, திருமகள் நகர்.

சாலையில் ஓடும் சாக்கடை


மதுக்கரை, போடிபாளையம், சீரப்பாளையம் பிரிவில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாமல் அடைபட்டுள்ளது. இதனால், கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. வாகனஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

- மோகன், மதுக்கரை.

கடும் துர்நாற்றம்


மத்திய மண்டலம், எம்.என்.ஜி., வீதி, வெங்கட் ரமணா திருமண மண்டபம் அருகே, 80வது வார்டில், திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையாலும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

- தங்கவேல், எம்.என்.ஜி., வீதி.






      Dinamalar
      Follow us