/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு விரிவாக்க பணி; மரங்களுக்கு மறுவாழ்வு! நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
/
ரோடு விரிவாக்க பணி; மரங்களுக்கு மறுவாழ்வு! நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ரோடு விரிவாக்க பணி; மரங்களுக்கு மறுவாழ்வு! நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ரோடு விரிவாக்க பணி; மரங்களுக்கு மறுவாழ்வு! நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஜூன் 25, 2024 11:52 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மார்க்கெட் ரோடு சந்திப்பு விரிவாக்கம் மற்றும் ரவுண்டான பணிக்காக அகற்ற வேண்டிய மரங்களை, வேரோடு தோண்டி எடுத்துச் சென்று நடுப்புணியில் மறுநடவு செய்கின்றனர்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், மார்க்கெட் ரோடு வழியாக தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், கேரளா மற்றும் ஆனைமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்கின்றன.
மார்க்கெட் ரோடு பகுதிகளில் அதிகளவு வணிக வளாகங்கள், குடோன்கள் உள்ளதால், சரக்கு ஏற்றி வரும் லாரிகளும் அதிகமாக வந்து செல்கின்றன.
இந்நிலையில், இப்பகுதியில் கனரக வாகனங்கள் ரோட்டிலே நிறுத்தப்பட்டு, சரக்குகள் இறக்கப்படுகின்றன. அந்த வாகனங்களை அணிவகுத்து மற்ற வாகனங்கள் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது.
இந்நிலையில், சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட எட்டு இடங்களில், சாலை சந்திப்புகள் மேம்படுத்துதல் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிக்காக மொத்தம், 11 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், திருவள்ளுவர் திடல் அருகே ரவுண்டானா அமைக்கப்படுகிறது. மார்க்கெட் ரோட்டில், 'யு டேர்ன்' அமைக்கப்பட உள்ளது. திருவள்ளுவர் திடலில் நெரிசலை கட்டுப்படுத்த ரவுண்டானா அமைக்கப்படுகிறது. தற்போது, ரோடுகள் சந்திப்பு பகுதி விரிவாக்கம் செய்து, மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில், அங்கு இருந்த புங்கன், அரசன், பூவரசன், மலைவேம்பு என, ஐந்து மரங்கள் மறு நடவு செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். மரங்களை வேரோடு தோண்டி எடுத்து, வாகனத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்று நடுப்புணியில் மறுநடவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.