/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை வாங்குவது போல் வந்து பிரபல நகைக்கடையில் திருட்டு
/
நகை வாங்குவது போல் வந்து பிரபல நகைக்கடையில் திருட்டு
நகை வாங்குவது போல் வந்து பிரபல நகைக்கடையில் திருட்டு
நகை வாங்குவது போல் வந்து பிரபல நகைக்கடையில் திருட்டு
ADDED : மார் 13, 2025 06:17 AM
கோவை; காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில், நகை வாங்குவது போல் வந்து செயினை திருடிச்சென்ற நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அபுதாகீர், 28. இவர் காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில், விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி நகைக்கடைக்கு ஒரு நபர் வந்து, நான்கு சவரன் தங்க செயின் வேண்டும் என கூறினார்.
அபுதாகீர், கடையில் இருந்த செயின்களை எடுத்து காண்பித்தார். அப்போது அவர், 22.360 கிராம் செயின் ஒன்றை தேர்வு செய்து, அதன் விலையை கேட்பது போல், விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பியுள்ளார். பின்னர், போன் பேசுவது போல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அந்த நபர் சென்ற பிறகு, அபுதாகீர் நகைகளை அடுக்கி வைத்த போது, 3 சவரன் தங்க செயின் ஒன்று மாயமானது தெரியவந்தது. அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.