/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொள்ளைக்கு திட்டம் : 11 பேர் கைது
/
கொள்ளைக்கு திட்டம் : 11 பேர் கைது
ADDED : ஜூலை 18, 2024 11:03 PM
போத்தனுார்;கோவைபுதுார் அருகே வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட, 11 பேர் சிக்கினர்.
குனியமுத்துார் போலீஸ் எஸ்.ஐ., ராஜா, கடந்த, 16ம் தேதி இரவு குளத்துபாளையம் பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்றார். அங்குள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்ட கும்பலிடம் விசாரித்தார். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். மற்றவர்கள் கேரள மாநிலம் காசர்கோடை சேர்ந்த முஹமது சியாவுதீன்,40, சுனில், 45, கண்ணுாரை சேர்ந்த அப்துல் ஹலீம், 47, ஷாமல், 46, கஞ்சங்காடை சேர்ந்த சமீர், 32, திருப்பூர், மங்கலத்தை சேர்ந்த பர்சாத், 25, சலீம் மாலிக், 25, ஷாஜஹான்,26, உக்கடம், கோட்டைமேடை சேர்ந்த முஹமது அனாஸ், 29, கர்நாடகா மாநிலம், உத்ராவை சேர்ந்த நவுபில் காஸிம் ஷேக்,29, திருப்பூரை சேர்ந்த முஹமது யாசிர், 18 மற்றும் தப்பி ஓடியவர் சரவணன் எனவும், அனைவரும் கோவைபுதுாரிலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்