தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்

ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்

ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்


ADDED : ஏப் 25, 2024 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

'கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், கடந்த மார்ச் 1ல் துவங்கிய, ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு முகாம், மே 31ம் தேதி வரை நடக்கிறது,' என, கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

புதுமையான மற்றும் உலகத்தரமான மருத்துவ தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்வதில் கே.எம்.சி.எச்., முன்னணியில் உள்ளது. இடுப்பு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சையில் 1990 முதல் முன்னணியில் உள்ளது.

நம் நாட்டில் சுமார் 15 சதவீத மக்கள் ஆர்த்ரைடிஸ் என்ற முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் வயதானவர்கள் முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் வலியால் அவதிப்படுகின்றனர். இதில், ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகள், பிசியோதெரபி, பயோலாஜிக்ஸ் ஆகிய பலவிதமான ஆரம்ப நிலை சிகிச்சை முறைகள் உள்ளன. பாதிப்பின் தன்மையை பொறுத்து, சிகிச்சை முறையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தீவிரமடைந்த நிலையில் இருந்தால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது, கே.எம்.சி.எச்.,ல் அதிநவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மிகத்துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும் மென்மையான திசுக்களைப் பாதுகாத்து நோயாளி விரைவில் குணமடையலாம். செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இக்கருவி வாயிலாக அறுவை சிகிச்சையை சுலபமாகவும், விரைவாகவும் மேற்கொள்ளலாம்.

மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளான்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை ஆகும். நோயாளி விரைவில் குணமடைவதால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகும்.

இக்கருவியைப் போல் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன 3டி சி ஆர்ம் (3D C-Arm) என்ற இமேஜிங் கருவியும் கே.எம்.சி.எச்.,ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தை இது அதிகரித்து சிறந்த பலனைக் கொடுக்கும். முப்பரிமான தொழில்நுட்பத்தின் துணையுடன் மருத்துவர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள இது உதவுகிறது.

மேலும் ஸ்குரூக்கள், இம்பிளான்டுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாகப் பொருத்தப்படுகிறது. கே.எம்.சி.எச்.,ல் மார்ச் 1ல் ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை முகாம் துவங்கியது. மே 31ம் தேதி வரை நடக்கும் இம்முகாமில், ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, 20 சதவீத சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் நடக்கும் இம்முகாமில் பங்கேற்க, காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us