/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்
/
ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்
UPDATED : மார் 22, 2024 12:06 PM
ADDED : மார் 22, 2024 12:06 AM
''அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில், கே.எம்.சி.எச்., முன்னணியில் உள்ளது,'' என, கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இந்தியாவில் சுமார் 15 சதவீத மக்கள் ஆர்த்ரைடிஸ் என்ற முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 18 சதவீத பெண்களுக்கும், 9.6 சதவீத ஆண்களுக்கும் இப்பிரச்னை உள்ளது.
ஆர்த்ரைடிஸ் சிகிச்சைக்கு வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகள், பிசியோதெரபி, பயோலாஜிக்ஸ் ஆகிய பலவிதமான ஆரம்ப நிலை சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது.
இதற்கு அதிநவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவி அறிமுகம் செய்துள்ளோம். இதன் வாயிலாக மிகத்துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. திசுக்களைப் பாதுகாத்து நோயாளி விரைவில் குணமடையவும் இது உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இந்த கருவி வாயிலாக, அறுவை சிகிச்சையை சுலபமாகவும், விரைவாகவும் மேற்கொள்ளலாம். நோயாளி விரைவில் குணமடைவதால், மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகும்.
இந்த ரோபோட்டிக் கருவியைப் போல் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன 3டி சி ஆர்ம் என்ற இமேஜிங் கருவியையும் கே.எம்.சி.எச்., அறிமுகம் செய்துள்ளது. எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளையும் மேம்பட்ட திறனுடன் செய்ய இது உதவுகிறது. முப்பரிமாண தொழில்நுட்பம் துணையுடன் மருத்துவர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள இது உதவுகிறது. மேலும், ஸ்குரூக்கள், இம்பிளாண்டுகள் உள்ளிட்டவை துல்லியமாகப் பொருத்தப்படுகிறது. கே.எம்.சி.எச்.,ல் மார்ச் 1ல் ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை முகாம் துவங்கியது. வரும் 31ம் தேதி வரை நடக்கும் இம்முகாமில், ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, 20 சதவீத சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
விவரங்களுக்கு: 73393 33485.

