/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரம் கழிவு நீர் :சுகாதாரம் பாதிப்பு
/
ரோட்டோரம் கழிவு நீர் :சுகாதாரம் பாதிப்பு
ADDED : மே 03, 2024 11:52 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பள்ளிவாசல் அருகே உள்ள ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, 4வது வார்டு, பள்ளிவாசல் பகுதியில், 50கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பள்ளி வாசல் செல்லும் இந்த ரோட்டில் வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ளது. ரோட்டில் சிறிய அளவிலான கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இதில், அதிகமாக கழிவு நீர் சென்று ரோட்டில் வழிந்தோடுகிறது.
மாதத்தில் ஐந்து முறை இவ்வாறு கழிவுநீர் வழிந்து செல்வதால், இந்த ரோட்டில் பயணிப்பவர்கள் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி சார்பில் இந்த கழிவை சுத்தம் செய்ய துாய்மை பணியாளர்கள் வந்தாலும், கழிவை ரோட்டின் ஓரத்தில் போட்டு செல்கின்றனர். பல நாட்களுக்கு கழிவை அகற்றாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.
இதனால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வரும் இஸ்லாமியர்களும் சிரமப்படுகின்றனர். பொதுச்சுகாதாரமும் பாதிக்கிறது. எனவே, மக்கள் நலன் கருதி கால்வாயில் தேங்கியுள்ள கழிவை அகற்றி, கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.