/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.2 கோடி மோசடி பெண் கோவை சிறையில் அடைப்பு
/
ரூ.2 கோடி மோசடி பெண் கோவை சிறையில் அடைப்பு
ADDED : மே 03, 2024 02:50 AM

கோவை:கோவை மாவட்டம், துடியலுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் மதுமிதா,32. கோவை ராமநாதபுரம் சிவராம் நகரில், 2021 முதல் 2023 வரை எம்.பி., டிரேடர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி, நண்பர்கள், உறவினர்களிடம் லட்சக்கணக்கில் வசூலித்தார்.
முதலீடு செய்த பணத்தில், குறைந்த தொகையை மட்டும் கொடுத்து விட்டு திடீரென அலுவலகத்தை பூட்டி விட்டு, துபாய்க்கு தப்பி சென்றார். பணத்தை இழந்தவர்கள், மதுமிதா எங்கே இருக்கிறார் என தெரியாமல் தவித்தனர்.
இந்நிலையில் துபாயிலும் இதே போல மோசடியில் ஈடுபட்ட அவர் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு அங்கிருந்து தப்பி கேரள மாநிலம் கொச்சிக்கு நேற்று முன்தினம் வந்தார். மதுமிதா வருவதை அறிந்த, ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவர் கொச்சி சென்றார். அங்கு மதுமிதாவிடம் பேசி கோவைக்கு அழைத்து வந்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில், 50க்கும் மேற்பட்டோரிடம் இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, மதுமிதாவை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.