/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய் கிலோவுக்கு ரூ.38 வழங்கணும் !
/
தேங்காய் கிலோவுக்கு ரூ.38 வழங்கணும் !
ADDED : ஜூலை 29, 2024 03:11 AM

பொள்ளாச்சி;'உரித்த தேங்காய் ஒரு கிலோவுக்கு, 38 ரூபாய் வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், பொள்ளாச்சி தாலுகா அமைப்பு பேரவை கூட்டம், பொள்ளாச்சி வங்கி ஊழியர்கள் சங்க கட்டடத்தில் நடந்தது.
சங்கத்தின் புளியம்பட்டி கிளை தலைவர் அப்பாவு முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட செயலாளர் பழனிசாமி, கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில துணை தலைவர் மதுசூதனன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, சர்வீஸ் ரோட்டை தரை மட்டத்தில் அமைத்து கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால், தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் நடைபெறும். பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதை கைவிட வேண்டும். பி.ஏ.பி., திட்டத்தில், நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணகைளை உடனடியாக கட்ட வேண்டும்.
உரித்த தேங்காய் ஒரு கிலோவுக்கு, 38 ரூபாய் வழங்க வேண்டும். கொப்பரை கிலோவுக்கு, 150 ரூபாய் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
பொள்ளாச்சி தாலுகா தலைவராக ஈஸ்வரன், செயலாளராக ஸ்டாலின் பழனிசாமி, பொருளா ளராக கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்கள், துணைச் செயலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வட்ட துணை தலைவர் ரவீந்திரன் பேசினார். புளியம்பட்டி கிளை நிர்வாகி கைலாச முருகன் நன்றி கூறினார்.