ADDED : ஏப் 18, 2024 11:51 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்;பா.ஜ., மண்டல தலைவரிடம், 81 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு, பூலுவபட்டியில், புஷ்பா தேவி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பா.ஜ. ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதிமணியின் காரை சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி, 81 ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதை அடுத்து ஜோதிமணியிடம் இருந்து, 81 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பேரூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
