/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை
/
மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை
ADDED : மார் 06, 2025 10:23 PM
வடவள்ளி; மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 91.70 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டது.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் உண்டியல் திறப்பு நேற்று நடந்தது. இதில், நிரந்தர உண்டியலில், 86,87,079 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 1,12,226 ரூபாயும்; கோசாலை உண்டியலில், 3,71,447 என, மொத்தம், 91,70,752 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, 86 கிராம் தங்கமும்; 6 கிலோ 500 கிராம் வெள்ளியும்; 34 கிலோ பித்தளையும் இருந்தது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் செந்தில் குமார் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர். உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.