/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 45 லட்சம் செலவில் ராமம்பாளையத்தில் தார் சாலை
/
ரூ. 45 லட்சம் செலவில் ராமம்பாளையத்தில் தார் சாலை
ADDED : ஆக 20, 2024 01:47 AM
மேட்டுப்பாளையம்;ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமம்பாளையத்தில், 45 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக தார் சாலை அமைக்க, பூமி பூஜை நடந்தது.
காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சியில், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ராமம்பாளையத்திற்கு செல்லும் தார் சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குழிகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த சாலைக்கு தார் போட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ், சிறுமுகை சாலையில் இருந்து, ராமம்பாளையம் வழியாக, தென் திருப்பதி சாலையில், ராமம்பாளையம் நுழைவு வாயில் வரை, புதிதாக தார் சாலை அமைக்க, 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த புதிய தார் சாலை அமைக்க ராமம்பாளையத்தில் பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

